Thursday, February 27, 2014

ஸ்ரீலங்காவின் பிரதான கலாசிற்பி கே.எஸ். பாலச்சந்திரன் கனடாவில் மரணமானார்.

ஸ்ரீலங்காவின் பிரதான கலாசிற்பி கே.எஸ். பாலச்சந்திரன் 26-02-2014 அன்று கனடாவில் மரணமானார்.

ஸ்ரீலங்காவின் யாழ்ப்பாணம் கரவெட்டியாவில 1944 ஆம் ஆண்டு ஜனித்தவர். பிறகு கனடாவில போய் ஜீவித்து வந்தவர்.

இவர் ஸ்ரீலங்காவின் நாடக, சினிமா, எழுத்து என பல விடயங்களில் திறமானவர்.

ஸ்ரீலங்கா றேடியோ நடிகர்களில் ஒருவர். ஏறக்குறைய 20 ஆண்டுளாக ஸ்ரீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்ததோடு, கனடாவிலும் பல தொலைக்காட்சி,வானொலி நிகழ்ச்சிகளில் நடித்திருக்கிறார்.

ஸ்ரீலங்கா றேடியோ  நடிகர்களில் ஒருவர். ஏறக்குறைய 20 ஆண்டுளாக ஸ்ரீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் அபிநயத்ததோடு, தணியாத தாகம் என்ற பலருக்கும் பரிச்சயமான றேடியோ தொடர் நாடகத்தில் சோமு என்ற பாத்திரத்தில் நடித்தவர். ஸ்ரீலங்கா ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகங்களான நிஜங்களின் தரிசனம், உதயத்தில் அஸ்தமனம், திருப்பங்கள் போன்றவற்றில் நடித்ததோடு காதம்பரி நிகழ்ச்சியில் பல குறு நாடகங்களை எழுதி அபிநயித்துள்ளார்.

1965ல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய “புரோக்கர் பொன்னம்பலம்” என்ற ஹாஷ்ய நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990ல் கொழும்பில் வெள்ளி விழா கொண்டாடியவர். இதிகாசம், சமூக, நவீன, நகைச்சுவை, பாநாடகம் என சகல வகையான மேடை நாடகங்களிலும் அபிநயித்துள்ளார். இலங்கையில் வாடைக்காற்று, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, ஷார்மிளாவின் இதய ராகம், Blendings (ஆங்கிலம்) அஞ்சானா (சிங்களம்)ஆகிய திரைப்படங்களிலும், கனடாவில் உயிரே உயிரே, தமிழிச்சி, கனவுகள் மென்மையான வைரங்கள், சகா,என் கண் முன்னாலே,1999 ஆகிய திரைப்படங்களிலும் அபிநயித்துள்ளார்..

ஸ்ரீலங்கா வானொலிக்காக ஏராளமான நகைச்சுவை நாடகங்களையும், தனி நாடகங்களையும், தொடர் நாடகங்களையும் எழுதியவர். தொடர் நாடகங்களில் கிராமத்துக் கனவுகள் இவரது பிறந்த இடமான கரவெட்டியை பின்னணியாக கொண்டிருப்பதும், வாத்தியார் வீட்டில் இவர் வாழ்ந்த இடமான இணுவிலை பின்னணியாகக் கொண்டிருப்பதும் தனிச்சிறப்பாகும்.

1 comment:

  1. பக்ரு பாபா,
    ஸ்ரீலங்கா கலைஞர் பாலச்சந்திரனுக்கு அஞ்சலிகள்.
    இவரை பற்றி இது வரை நான் அறியவில்லை. இவர் மரண செய்தி கட்டுரைகள் மெயிலில் வந்தன நீங்க அடிக்கடி தமிழ் பதிவுகளில் நிறைய உங்க கருத்துக்களை தெரிவியுங்க. பலருக்கு தெளிவு கிடைக்கும்.

    ReplyDelete